எமதர்மர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை
ADDED :892 days ago
மேட்டுப்பாளையம் : சிறுமுகை அருகே உள்ள சென்னாம்பாளையம் எமதர்மர் கோவிலில், சனி பிரதோஷத்தை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது
சிறுமுகை, சென்னம்பாளையத்தில், எமதர்மருக்கு தனியாக கோவில் கட்டி வழிபாடும், சிறப்பு பூஜையும் செய்து வருகின்றனர். ஒவ்வொரு பிரதோஷ நாளிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். இன்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு எமதர்மருக்கு பால், நெய், பஞ்சாமிர்தம், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின், அலங்காரம் செய்து சிறப்பு பூஜை செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் எமதர்மர், காலகாலேஸ்வரர் மற்றும் இன்ப விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.