ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறப்பு
ADDED :891 days ago
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஆடி மாத பூஜைக்காக இன்று மாலை திறக்கப்படுகிறது.
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று 16ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. நாளை தேதி முதல் 21ம் தேதி வரை 5 நாட்கள் பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். பக்தர்கள் தரிசனம் செய்யலாம். ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்களின் வசதிக்காக, நிலக்கல்லிலும் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு நடைபெறுகிறது.