உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு: குவிந்த பக்தர்கள்

ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு: குவிந்த பக்தர்கள்

சபரிமலை: ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறந்தது. நாளை காலை முதல் நெய்யபிஷேகம் நடைபெறும்.

இன்று மாலை 5:00 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். வேறு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. நாளை அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்து நிர்மால்ய தரிசனம் முடிந்ததும் தந்திரி கண்டரரு ராஜீவரரு நெய்யபிஷேகத்தை தொடங்கி வைப்பார். தொடர்ந்து கணபதி ேஹாமத்துக்கு பின்னர் வழக்மான உஷபூஜை, உச்சபூஜை போன்றவை நடைபெறும். 21-ம் தேதி வரை எல்லா நாட்களிலும் மதியம் 25 கலசாபிஷேகம், களபாபிஷேகம், இரவு 7:00 மணிக்கு படிபூஜை நடைபெறும். ஐந்து நாட்களும் உதயாஸ்மனபூஜை உண்டு. 21-ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். அதன் பின்னர் நிறைபுத்தரிசி பூஜைகளுக்காக ஆக., ஒன்பதாம் தேதி மாலை 5:00 மணிக்கு நடை திறக்கும். 10-ம் தேதி நிறைபுத்தரிசி பூஜை நடைபெறும். பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !