/
கோயில்கள் செய்திகள் / திருப்பதி கோயிலில் ஒரே நாளில் 72000 பக்தர்கள் தரிசனம்; 5 கோடிக்கு மேல் காணிக்கை!
திருப்பதி கோயிலில் ஒரே நாளில் 72000 பக்தர்கள் தரிசனம்; 5 கோடிக்கு மேல் காணிக்கை!
ADDED :854 days ago
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். வார விடுமுறை நாளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அவர்கள் முடி காணிக்கை, உண்டியலில் காணிக்கை செலுத்தி வேண்டுதல் நிறைவேற்றி வருகின்றனர். தற்போது கோவிலுக்கு வரும் பக்தர்கள் வருகை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதில் ஒரே நாளில் 5 கோடியே 40 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதில் ஒரே நாளில் 71 ஆயிரத்து 894 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளது குறிபிடத்தக்கது.