வெள்ளிக்கிழமையில் உப்பு வாங்கினால் லட்சுமி கடாட்சம் வரும் என்பது ஏன்?
ADDED :874 days ago
ஒரு விஷயத்தில் எது இன்றியமையாததோ அது தெய்வத்திற்கு ஒப்பானதாகக் கருதப்படுகிறது. நீரின்றி அமையாது உலகு என்பதால் தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே என்பர். அது போல உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்ற பழமொழி உப்பின் அவசியத்தைச் சொல்கிறது. லட்சுமி பாற்கடலில் தோன்றியவள். நாம் காண்பது உப்புக்கடல். உப்பும் கடலில் கிடைக்கிறது. இதன் அடிப்படையில் உப்பை லட்சுமியின் அம்சமாக போற்றுகிறோம். கிரகப் பிரவேசத்தில் புதிய வீட்டிற்கு முதலில் எடுத்துச் செல்லும் பொருட்களில் உப்பு முதன்மை பெறுவதைக் காணலாம். அதை லட்சுமிக்கு உகந்த வெள்ளிக்கிழமையில் வாங்கினால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.