உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோவிலில்  ஆடிப்பூரம்  பிரம்மோற்சவ  விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

ஆடிப்பூரம்  பிரம்மோற்சவ விழாவையொட்டி,  உண்ணாமுலையம்மன் சன்னதி அருகே உள்ள  தங்க கொடிமரத்தின் முன் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, மேளதாளம் முழங்க, காலை 6.15 மணிக்கு கொடியேற்றப்பட்டது. உண்ணாமுலையம்மன் சன்னதி அருகே உள்ள  தங்க கொடிமரத்தின் முன் எழுந்தருளிய பராசக்தியம்மன் மற்றும் வெள்ளி கவசத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்பாளை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !