பச்சை நிற பட்டுடுத்தி தங்க தேரில் வலம் வந்த காஞ்சி காமாட்சியம்மன்
ADDED :843 days ago
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு தங்கத் தேர் பவனி வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த தங்கத்தேர் உற்சவத்தை ஒட்டி காஞ்சி காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, பச்சை நிற பட்டு உடுத்தி,திருவாபரணங்கள், மல்லிகை பூ,ஏலக்காய் மாலை உள்ளிட்ட மலர் மாலைகள் அணிவித்து,லட்சுமி, தேவிகளுடன் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேரில் எழுந்தருளச் செய்து சிறப்பு வழிபாடு, மகா தீபாராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் இழுக்க கோவில் பிரகாரத்தில் தங்க தேர் வலம் வந்தது. விழாவில் ஏராளமான பகதர்கள் கலந்த கொண்டு அம்னை தரிசனம் செய்தனர்.