காளஹஸ்தி வாசவி கன்னிகா பரமேஸ்வரி தேவஸ்தானத்தில் மணிதீப வர்ண பூஜை
ADDED :843 days ago
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், காளஹஸ்தியில் உள்ள பஜார் தெருவில் வீற்றிருக்கும் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி தேவஸ்தானத்தில் நேற்று ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு மணிதீப வர்ண பூஜை மற்றும் பல்வேறு விதமான மலர்கள், வளையல்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்தனர். இதில் ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.