திருவாரூர் தியாகராஜர் கோயிலில் கமலாம்பாள் தேரோட்டம்; பக்தர்கள் பரவசம்
ADDED :992 days ago
திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் கோவிலில், ஆடிப்பூர உற்சவ விழாவில், கமலாம்பாள் தேரோட்டம் நடந்தது.
திருவாரூர் தியாகராஜர் கோவிலில், கமலாம்பாள் ஆடிப்பூர உற்சவ விழா, கடந்த, 14ம் தேதி துவங்கியது. அன்று முதல், தினமும், பூத வாகனம், யானை வாகனம், ரிஷப வாகனங்களில் அம்பாள் எழுந்தருளி வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக, இன்று கமலாம்பாள் தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தை ஒட்டி, காலை, 10:30 மணிக்கு, தேருக்கு அம்பாள் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளுக்கு பின் அம்பாள் தேர் வடம் பிடிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கீழவிதியில் புறப்பட்ட தேர், தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக வலம் வந்தது. திரளான பக்தர்கள் ஆருரா கமலாம்பாள் கோஷத்துடன் வழிபட்டனர்.