அரசாள வந்த அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை
ADDED :843 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அரசாள வந்த அம்மன் கோயில் பால்குட விழாவை முன்னிட்டு, 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையை முன்னிட்டு பெண்கள் உலக நன்மை வேண்டி சிறப்பு வழிபாடு செய்தனர். தொடர்ந்து ஆடிபூரத்தை முன்னிட்டு மூலவர் அரசாள வந்த அம்மன், துர்க்கை அம்மன் ஆகியோருக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, மலர் அலங்காரம் மற்றும் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டது. நடைபெற்ற தீப ஆராதனையில், சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.