உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் ஆடிப்பூர வழிபாடு

திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் ஆடிப்பூர வழிபாடு

திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் ஆடிப்பூர உற்ஸவத்தை முன்னிட்டு அம்மனுக்கு திருவிளக்கு பூஜை நடந்தது.

குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் சிவகாமி அம்மனுக்கு காலை 11:00 மணிக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அம்மன் வளையல் அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து மாலையில் அம்மன் சன்னதியில்  திருவிளக்கு பூஜை நடந்தது.  ஆதீனகர்த்தர் பொன்னம்பல அடிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க 250க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜையில் பங்கேற்றனர். பின்னர்  அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. பக்தர்கள் தரிசித்தனர். திருப்புத்தூர் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் காலை 11:00 மணிக்கு ஆண்டாள் நாச்சியாருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பின்னர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து கருடாழ்வாருக்கு அபிஷேகம் செய்து கருட பஞ்சமி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !