சிங்கம்புணரியில் தயாரான 170 அடி நீள தேர் வடம்
ADDED :826 days ago
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் அம்மன் கோயிலுக்கான 170 அடி நீள தேர் வடம் தயாரித்து அனுப்பப்பட்டது.
சிங்கம்புணரியில் பல்வேறு கோயில்களுக்கு தேர் வடக்கயிறுகள் தயாரிக்கப்படுகின்றன. நேற்று புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி குலமங்கலம் உடையபராசக்தி கோயில் தேருக்கான வடக்கயிறுகள் சிங்கம்புணரியில் தயாரிக்கப்பட்டது. சேவுகப்பெருமாள் கோயில் ரத வீதியில் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 10 நாட்களாக வடக்கயிறு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். நல்லதம்பி, தேர் வட தயாரிப்பாளர்; இங்கிருந்து பல்வேறு மாநிலங்களில் உள்ள கோயில்களுக்கு வேறு வடக்கயிறுகளை தயாரித்து அனுப்புகிறோம். இதுவரை 500 அடி நீளம் வரை தயாரித்துள்ளோம். தற்போது குலமங்கலம் கோயிலுக்கு 15 இன்ச் அகலத்தில் 170 அடி நீளம் உள்ள இரண்டு தேர் வட கயிறுகளை தயாரித்து அனுப்புகிறோம்.