உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் பரத நாட்டியமாடிய படி கிரிவலம் சென்ற பெண்

திருவண்ணாமலையில் பரத நாட்டியமாடிய படி கிரிவலம் சென்ற பெண்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், உலக நன்மைக்காக பரதநாட்டியம் ஆடியவாறு பெண் பக்தர் கிரிவலம் சென்றார். ஆந்திர மாநிலம் நெல்லுாரை சேர்ந்தவர் பவ்யஹாசினி, 25, பரதநாட்டிய கலைஞர்; அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனின் பக்தரான இவர், உலக நன்மை வேண்டி, நேற்று பரதநாட்டியமாடியவாறு, 14 கி.மீ., துாரம் கிரிவலம் சென்றார். பின் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டார். நடனமாடியபடி கிரிவலம் சென்றவரை, மக்கள் மற்றும் பக்தர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !