செஞ்சி காசி விஸ்வநாதர் கோவில் அம்மனுக்கு வளையல் அலங்காரம்
ADDED :1175 days ago
செஞ்சி: செஞ்சி காசி விஸ்வநாதர் கோவில் ஸ்ரீவிசாலாட்சி அம்மனுக்கு ஆடிப்பூரத்தை முன்னிட்டு வளையல் அலங்காரம் செய்தனர்.
செஞ்சி விசாலாட்சி அம்மன் சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பெண்கள் வளையம் உள்ளிட்ட சீர் வரிசை பொருட்களை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு வளையல் சாற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர். மூலவர் காசி விஸ்வநாதருக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள், சிவ பக்தர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.