காளஹஸ்தி சிவன் கோயிலில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி தரிசனம்
ADDED :902 days ago
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ். கே.ஜே.டாகெர் தனது குடும்பத்தாருடன் தரிசனம் செய்ய வந்தார். அவருக்கு கோயில் அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசலு சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு, சிறப்பு தரிசன ஏற்பாடுகளையும் செய்தனர். கோவிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசூனாம்பிகை தாயாரையும் தரிசனம் செய்தார். கோயில் வளாகத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்த பிரசாதங்களையும் சாமி அம்மையார்களின் உருவப்படத்தை கோயில் அதிகாரிகள் வழங்கினர்.