உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் ரேணுகா பரமேஸ்வரி கோவிலில் தீமிதி திருவிழா

சிதம்பரம் ரேணுகா பரமேஸ்வரி கோவிலில் தீமிதி திருவிழா

சிதம்பரம்: சிதம்பரம் சி. கொத்தங்குடி தோப்பில் அமைந்துள்ள திரு சக்திமகா மாரியம்மன் ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி கோவிலில் நேற்று தீமிதி உற்சவம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

சிதம்பரம் அண்ணாமலை நகர் சி.கொத்தங்குடி தோப்பில் அமைந்துள்ள மகா மாரியம்மன் ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி கோவில் 31 ம ஆண்டு தீ மிதி திருவிழா கடந்த 16ஆம் தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடந்தது. முக்கிய விழாவான தீமிதி உற்சவ நாளான நேற்று காலை 6 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும் கரங்கள் எடுத்தாலும் நடந்தது. தொடர்ந்து பிராணிகளுக்கு சிறல் போடுதல் பக்தர்கள் காவிரி எடுத்தல் அலகு போடுதல் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். நாளை 6:00 மணிக்கு காளி ஆட்டத்துடன் தீமிதி திருவிழா தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து இரவு அம்பாளுக்கு அபிஷேகமும் அம்மன் வீடியோ காட்சி நடந்தது இரவு ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் கொத்தங்குடி கிராமத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !