உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவசக்தி மாரியம்மன் செடல் திருவிழா

நவசக்தி மாரியம்மன் செடல் திருவிழா

குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி, நவசக்தி மாரியம்மன் கோவில் செடல் திருவிழா துவங்கியது. குள்ளஞ்சாவடி அடுத்த, வழுதலம்பட்டு பகுதியில், அருள்மிகு ஸ்ரீ நவசக்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலின், 19 ஆவது ஆண்டு செடல் திருவிழா நேற்று முன்தினம், கங்கை கொண்டு வருதல் மற்றும், கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மாலை, சாகை வார்த்தல் மற்றும், அம்மன் வீதி உலா நடந்தது. தொடர்ந்து நடைபெறும் விழாவில், வெள்ளிக்கிழமை 28ம் தேதி செடல் போடுதல், 29ம் தேதி மஞ்சள் நீராட்டு ஆகியவை நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை சின்னதானங்குப்பம் கிராமவாசிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !