உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றம்

சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றம்

தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயில் ஆடிப்பெரும் திருவிழா தேரோட்டம் நடைபெறுவதால், நேற்று கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயில் குடகனாற்றின் வட கரையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க திருக்கோயில் ஆகும். இத்திருக்கோயில் கி.பி., 1538 ஆம் ஆண்டு விஜயநகர மன்னர்களான அச்சு தேவராயர், ராம தேவராயர் என்பவர்களால் கட்டப்பட்டதாகும். வரலாற்று சிறப்புமிக்க தாடிக்கொம்பில் அமைந்துள்ள அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்றகோலத்தில் கிழக்கு நோக்கி திருமுகமண்டலமாக எழுந்தருளி அருள்பாளித்து வருகிறார். இக்கோயிலில் நேற்று காலை 7:30 க்குள் கொடியேற்றம் நடந்தது. வருகிற 30.7.2023 ஞாயிறு அன்று மாலை 6:30 மணி முதல் 7:30 மணிக்குள் திருக்கல்யாணமும், 1.8.2023 செவ்வாய்க்கிழமை மாலை 4:30 மணிக்கு மேல், வடம் பிடித்தல் திருத்தேரோட்டமும், 3.8.2023 வியாழன் மாலை 6 மணிக்கு மேல் தெப்ப உற்சவமும் நடைபெறும். திருக்கோயில் உதவி ஆணையர் சுரேஷ், செயல் அலுவலர் முருகன் உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !