உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சொட்டக்காரன் சுவாமி கோயிலில் புரவி எடுப்பு திருவிழா

சொட்டக்காரன் சுவாமி கோயிலில் புரவி எடுப்பு திருவிழா

கொட்டாம்பட்டி: சொக்கம்பட்டி சொட்டக்காரன் சுவாமி புரவி எடுப்பு திருவிழா நேற்று துவங்கியது. நள்ளிரவில் விநாயகர் கோயிலில் இருந்து மந்தைக்கு புரவிகள் கொண்டு செல்லப்பட்டது. நாளை (ஜூலை 26) மதியம் மந்தையில் இருந்து 4 கி.மீ., தொலைவில் உள்ள சீத்தா மற்றும் வெள்ளமலையில் உள்ள சொட்டக்காரன் கோயிலுக்கு புரவிகள் கொண்டு செல்லப்பட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இவ்விழாவில் சொக்கம்பட்டி, வலைச்சேரிபட்டி, வேலாயுதம்பட்டி உள்ளிட்ட 5 கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !