கன்னியாகுமரி கோயில்களில் தமிழக கவர்னர் சுவாமி தரிசனம்
ADDED :809 days ago
நாகர்கோவில்: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கன்னியாகுமரியில் கோயில்களில் தரிசனம் நடத்தினார். இரண்டு நாள் பயணமாக நேற்று கன்னியாகுமரி வந்த அவர் விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகில் சென்று பார்வையிட்டு அஞ்சலி செலுத்தினார். இன்று காலை சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் நடத்தினார். தொடர்ந்து கன்னியாகுமரி விவேகானந்தபுரம் விவேகானந்தா கேந்திராவில் பாரதமாதா கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடத்தை பார்வையிட்டார்.