உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலை திருப்பதியில் இந்த வருடம் இரண்டு பிரம்மோற்சவம்

திருமலை திருப்பதியில் இந்த வருடம் இரண்டு பிரம்மோற்சவம்

திருப்பதி; திருமலை திருப்பதியில் இந்த வருடம் செப்டம்பர் மாதம் ஒரு முறையும் அக்டோபர் மாதம் ஒரு முறையும் என இரண்டு பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. 


திருமலை திருப்பதியில் வருடம் முழுவதும் திருவிழாக்கள்  நடைபெற்றாலும்  வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் பிரம்மோற்சவ விழா மிகவும் பிரசித்தம். உலகம்  முழுவதிலும் இருந்து பெருமாள்  பக்தர்கள் இந்த விழா நாட்களில் தரிசனம் பெற திரள்வர். மூன்று வருடத்திற்கு ஒரு முறை  இரண்டு பிரம்மோற்சவம் நடைபெறும். அந்த வகையில்  இந்த வருடம் இரண்டு பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. ஸ்ரீ வாரி பிரம்மோற்சவம் செப்டம்பர் மாதமும், நவராத்திரி பிரம்மோற்சவம் அக்டோபர் மாதமும் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.


ஸ்ரீ வாரி பிரம்மோற்சவ நிகழ்ச்சி நிரல்:

18/09/23 மாலை 5:30 கொடியேற்றம்
19/09/23 காலை சின்ன சேஷ வாகனம்,இரவில் அன்னவாகனம்
20/09/23 காலை சிம்ம வாகனம் இரவில் முத்து பந்தல் வாகனம்
21/09/23 காலை கல்ப விருட்ச வாகனம் இரவில் சர்வபூபாள வாகனம்
22/09/23 காலை மோகினி அவதாரம் மாலை கருட வாகனம்
23/09/23 காலை அனுமன் வாகனம் மாலை தங்க ரதம் இரவில் யானை வாகனம்
24/09/23 காலை சூர்யபிரபை வாகனம் இரவில் சந்திர பிரபை வாகனம்
25/09/23 காலை தேரோட்டம் இரவில் குதிரை வாகனம்
26/09/23 காலை சக்ரஸ்நானம்

நவராத்திரி பிரம்மோற்சவ நிகழ்ச்சி நிரல்:

15/10/23 இரவில் பெரிய சேஷ வாகனம்
16/10/23 காலை சின்ன சேஷ வாகனம் இரவில் அன்ன வாகனம்
17/10/23 காலை சிம்ம வாகனம் இரவில் முத்து பந்தல் வாகனம்
18/10/23 காலை கல்ப விருட்ச வாகனம் இரவில் சர்வபூபாள வாகனம்
19/190/23 காலை மோகினி அவதாரம் இரவில்  கருட வாகனம்
20/10/23 காலை அனுமன் வாகனம் இரவில் கஜவாகனம்
21/10/22 காலை சூர்யபிரபை வாகனம் இரவில் சந்திரபிரபை வாகனம்
22/10/23 மாலை தங்க ரதம் இரவில் குதிரை வாகனம்
23/10/23 சக்ர ஸ்நானம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !