உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடவுள் நம்முடன் இருந்தால் தேவையான அனைத்தும் கிடைக்கும்!

கடவுள் நம்முடன் இருந்தால் தேவையான அனைத்தும் கிடைக்கும்!

ராமேஸ்வரம்: நாமும் அர்ச்சுணனைப்போல் கடவுளையே கேட்போம் என, திருச்சி கல்யாணராமன் கூறினார். ராமேஸ்வரம் சிருங்கேரி மடத்தில் வில்லிபாரத தொடர் சொற்பொழிவில், நச்சுப்பொய்கை என்ற தலைப்பில் இவர் பேசியதாவது: பாண்டவர்கள் ஒரு வருடம் விராதம் நகரில் வாழ்ந்தார்கள். அதன்பின், கிருஷ்ணர் துவாரகையில் இருக்கும்போது, துரியோதணன் அவரை தேடி வந்தான். கிருஷ்ண பரமாத்மாவை, கடவுள் என்று ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், அவருடைய நாராயண படையை விரும்பி கேட்க வந்தான். அந்த காலத்தில் இருந்தே வழக்கம். கடவுள் இல்லை என்பார்கள். கோயில் பிரசாதத்தை சாப்பிடுவார்கள். அதேபோன்று அன்று துரியோதணன் விரும்பினான் கிருஷ்ணர் பள்ளி கொண்டிருந்தார். தலை பக்கத்திலே துரியோதணன் உட்கார்ந்தான். அப்போது அர்ச்சுணன் வந்தான். கிருஷ்ணர் திருவடியில் நின்றார். கிருஷ்ணர், அவரை முதலில் பார்த்து, உனக்கு என்ன வேண்டும், என்றார். நீ என் பக்கத்தில் இரு. அதுவே போதும், என்றான். கடவுளை பார்த்தால், நாம் கடவுளையே கேட்க வேண்டும். கடவுள் நம்முடன் இருப்பாரேயானால், இந்த உலகத்தில் நமக்கு தேவையானதும், அந்த உலகத்திற்கு தேவையானதும் நமக்கு கிடைத்து விடும். பக்தர்கள் அனைவரும் கோயிலுக்கு செல்லும்போது, அர்ச்சுணனைப்போல், கிருஷ்ணா என் பக்கத்தில் எப்போதும் இரு, என வேண்டிக்கொள்ள வேண்டும். ஆனால், துரியோதணன் கிருஷ்ணனை பார்த்து, நாராயண படையை எனக்கு கொடு, போர்களத்தில் ஆயுதம் எடுத்து சண்டை போட மாட்டேன், என்ற வரமும் கொடு என்று கேட்டான். இறைவனை வணங்கும்போது, இந்த உலகத்திற்கு நாம் எதையும் விரும்பாமல் இருந்து விட்டாலே, மோட்சம் கிடைக்கும் என்று வள்ளுவர் கூறினார். நாமும் அர்ச்சுணனைப்போல், கடவுளையே கேட்போம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !