கண்ணகப்பட்டு சிதம்பர சுவாமி மடம்: ரூ.50 லட்சத்தில் புதுப்பிக்க திட்டம்
திருப்போரூர்: திருப்போரூர், கண்ணகப்பட்டு, சிதம்பர சுவாமி மடத்தை, 50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்க, டெண்டர் விடப்பட்டுள்ளது.
400 ஆண்டுகள்...: திருப்போரூர், கந்தசுவாமி கோவிலின் முதல் ஆதீனமாக விளங்கியவர், மதுரையை சேர்ந்த பத்ம சிதம்பர கவிராயர். இவர், 400 ஆண்டுகளுக்கு முன், மீனாட்சி அம்மன் அருளால், கந்தன் கோவிலை புதுப்பிக்க, இங்கே வந்தார். கண்ணகப்பட்டு கிராமத்தில் மடத்தை நிறுவினார். வைகாசி விŒõக பவுர்ணமி நாளில், ஜோதி வடிவாக மறைந்தார். மடத்தில், வைகாசி விŒõகத்தில் குரு பூஜையும், பவுர்ணமி, சஷ்டி, விŒõக நாட்களில் சிறப்பு அபிஷேக பூஜைகளும் நடத்தப்படுகின்றன. தற்போது, மடத்தின் முகப்பு பகுதி, ஒடுக்கறை, அன்னதானக் கூடம், விமானம் ஆகியவை சேதமடைந்து, மழைக் காலத்தில் தண்ணீர் உள்ளே கொட்டுகிறது. முட்புதர்கள் வளர்ந்துள்ளன.
டெண்டர்: இடிந்து விழும் நிலையில் உள்ள, புராதன பெருமை கொண்ட மடத்தை, சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். மடத்தை சீரமைக்க, இந்து சமய அறநிலையத் துறை அனுமதி அளித்தது. கந்தசுவாமி கோவில் நிர்வாகம் சார்பில், திருப்பணி செய்ய முடிவானது. இதையடுத்து, கடந்த 27ம் தேதி, 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மடத்தை சீரமைக்க, டெண்டர் விடப்பட்டுள்ளது. கோவில் செயல் அலுவலர் பாலகிருஷ்ணன் கூறுகையில், சீரமைப்பு பணிகள் ஒரு மாதத்தில் துவங்கும். ஓராண்டுக்குள் பணி நிறைவு பெறும் என்றார்.