உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்தில் வேல் எடுக்கும் திருவிழா!

திருப்பரங்குன்றத்தில் வேல் எடுக்கும் திருவிழா!

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்., 12ல், மலை மேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழா நடக்கிறது. அன்று காலை கோயில் மூலவரிடம் உள்ள தங்க வேலுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, பல்லக்கில் வீதி உலா கொண்டு வரப்படும். பின், மலைமேல் கொண்டு செல்லப்பட்டு, சுவாமி சுப்பிரமணியர் கரத்தில் சேர்ப்பிக்கப்படும். காசிவிஸ்வநாதர் கோயில் முன்பு உள்ள, வற்றாத சுனை தீர்த்தத்தில் வேலுக்கு அபிஷேகம் நடைபெறும். கிராமத்தினர் சார்பில், பக்தர்களுக்கு கதம்ப சாதம் வழங்கப்படும். மாலையில் மலை அடிவாரத்திலுள்ள பழனியாண்டவர் கரத்தில் வேல் சேர்ப்பிக்கப்பட்டு, இரவு பூப்பல்லக்கில் எடுத்துவரப்பட்டு, மீண்டும் மூலவர் கரத்தில் வேல் சேர்ப்பிக்கப்படும். அக்.,12ல் வேல், மலைக்குப் போவதால், அன்றைய தினம் வேலுக்கு அபிஷேகம் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !