/
கோயில்கள் செய்திகள் / செங்கழுநீர் அம்மன் கோயில் செடல் மகோற்சவம்; அலகு குத்தி பெண்கள் நேர்த்திக்கடன்
செங்கழுநீர் அம்மன் கோயில் செடல் மகோற்சவம்; அலகு குத்தி பெண்கள் நேர்த்திக்கடன்
ADDED :800 days ago
புதுச்சேரி ; வாழைகுளம், செங்கழுநீர் அம்மன் கோயிலில் செடல் மகோற்சவ விழாவில் பெண்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
புதுச்சேரி, வாழைகுளம், அப்பாவு நகர் ஸ்ரீ செங்கழுநீர் அம்மன் கோயிலில் 95 ஆம் ஆண்டு செடல் மகோற்சவ விழாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பெண்கள் அலகு குத்தியும், அங்கப்பிரதட்சணம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.