உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்தி மாரியம்மன் கோவிலில் நவசக்தி அர்ச்சனை பெருவிழா

சக்தி மாரியம்மன் கோவிலில் நவசக்தி அர்ச்சனை பெருவிழா

பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள சக்தி மாரியம்மன் கோவிலில் நவசக்தி அர்ச்சனை பெருவிழா நடந்தது. ஆடி மாத இரண்டாம் வெள்ளிக்கிழமையையொட்டி நரசிம்மநாயக்கன்பாளையம் சக்தி மாரியம்மன் திருக்கோவிலில் காலை, 6.00 மணிக்கு தேவதா பூஜை, விநாயகர் வழிபாடு, சங்கல்பம், மகா யாகம், தீபாராதனை நடந்தது. காலை, 9.00 மணிக்கு நவசக்தி அர்ச்சனை துவங்கின. மதியம், 12.00 மணிக்கு மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !