புல்லமடையில் குதிரை எடுப்பு விழா
ADDED :1173 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே புல்லமடை முத்து மாரியம்மன் கோவில், விழாவை முன்னிட்டு குதிரை எடுப்பு விழா நடைபெற்றது. முன்னதாக, நேர்த்திக்கடன் இருந்த பக்தர்கள் மண்ணால் செய்யப்பட்ட மண் குதிரைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று அய்யனார் கோயிலில் வைத்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து அம்மனுக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.