உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜம்புலிபுத்தூர் கோயில் சுற்றுச்சுவர் உறுதி தன்மைக்கு நடவடிக்கை தேவை

ஜம்புலிபுத்தூர் கோயில் சுற்றுச்சுவர் உறுதி தன்மைக்கு நடவடிக்கை தேவை

ஆண்டிபட்டி: ஜம்புலிப்புத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் சுற்றுச்சுவர் உறுதி தன்மையை உறுதி செய்ய ஹிந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இக்கோயில் கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகளை கடந்துள்ளது. கோயில் கும்பாபிஷேகத்திற்கான பாலாலய பணிகள் சில மாதத்திற்கு முன் நடந்தது. இதனைத் தொடர்ந்து கோயில் கோபுரம், கருவறை சீரமைத்தல், சுற்றுப் பிரகாரத்தில் கல் பதித்தல், மழைநீர் வடிகால் அமைத்தல், கோயில் சுற்றுச்சுவர் வர்ணம் பூசுதல் உட்பட பல்வேறு பணிகள் பல லட்சம் ரூபாய் செலவில் உபயதாரர்கள் மூலம் ஹிந்து அறநிலையத்துறை கண்காணிப்பில் நடந்து வருகிறது. கோயில் சுற்றுப்புறத்தின் தென் பகுதியில் உள்ள சுவர் சீரமைப்பில் சரிந்துள்ளது. கடந்த பல ஆண்டுக்கு முன் பெரிய கற்களால் சுண்ணாம்பு கலவையுடன் கட்டப்பட்ட சுவர் உறுதி தன்மையுடன் உள்ளதா என்பது குறித்து ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கோயில் வளாகத்தில் உள்ள அரச மரத்தின் வேர்கள் சுற்றுச்சுவரின் பல இடங்களில் பரவி பலம் இழக்கச் செய்துள்ளதாக கோயில் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !