உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / போகர் புலிப்பாணி சித்தர்கள் எழுதிய ஓலைச்சுவடிக்கு சிறப்பு பூஜை

போகர் புலிப்பாணி சித்தர்கள் எழுதிய ஓலைச்சுவடிக்கு சிறப்பு பூஜை

பழநி: பழநி முருகன் கோயில் அடிவாரம் பகுதியில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்தில் போகர் புலிப்பாணி ஆகியோர் எழுதிய ஓலைச்சுவடிகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

பழநி முருகன் கோயில் அடிவாரம்,கிரி விதி பகுதியில் புலிப்பாணி ஆசிரமம் உள்ளது. இங்கு போகர் புலிப்பாணி சித்தர்கள் எழுதிய பழமையான ஓலைச்சுவடிகள் உள்ளன. ஆடி 18 ஆடி பெருக்கை முன்னிட்டு நேற்று ஓலைச்சுவடிகள் போகர் விக்கிரகத்திற்கு முன்பு வைத்து பூஜை செய்யப்பட்டது. ஓலைச்சுவடிகளுக்கு மலர்கள் தூவி சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் புலிப்பாணி பாத்திர சுவாமிகள் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !