ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் 89வது ஜெயந்தி விழா விமரிசை
ADDED :827 days ago
காஞ்சிபுரம் : காஞ்சி சங்கர மடத்தின் 69வது பீடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 89வது ஜெயந்தி விழா நேற்று சங்கர மடத்தில் நடந்தது.
காலையில் இருந்து மடத்தில் பாராயணம் மற்றும் ஹோமங்கள் நடந்தன. தொடர்ந்து, இசை கச்சேரி நடந்தது. மேலும், வாரணாசியில் சாதுர்மாஸ்யம் விரதம் அனுஷ்டித்து வரும் பூஜ்யஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி விழா மற்றும் பூஜைகள் நடந்தது. நேற்று ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கங்கையில் பூஜை செய்தார். காஞ்சி மடத்தின் சார்பில், காமாட்சி அம்மன் கோவில் குளத்தில் பூஜைகள் நடந்தன.