உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் கோவில் கோபுரம் விரைவில் மராமத்து பணி: அமைச்சர் சேகர் பாபு

ஸ்ரீரங்கம் கோவில் கோபுரம் விரைவில் மராமத்து பணி: அமைச்சர் சேகர் பாபு

திருச்சி: சமீபத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இடிந்து விழுந்த கோபுரத்தை ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று(ஆகஸ்ட் 08) ஆய்வு செய்தார்.பின்னர் அவர் அளித்த பேட்டி: கோபுரம் இடிந்து விழுந்த சம்பவத்தை அறிந்த தமிழக முதல்வர் மாற்று நடவடிக்கை எடுத்து மராமத்து பணி செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். இடிந்து விழுந்த கோபுரம் மட்டுமின்றி ரங்கநாதர் கோவிலில் உள்ள 21 கோபுரங்களும் என்.ஐ.டி., தொழில்நுட்ப வல்லுனர்களைக் கொண்டு ஆய்வு செய்யப்பட உள்ளது. தற்போது இடிந்து விழுந்த கோபுரம் 94 லட்சம் ரூபாய் செலவில் மராமத்து செய்யப்பட உள்ளது. கோபுரம் மராமத்து பணிக்கு நன் கொடையாளர்கள் நிதி தர விருப்பமாக உள்ளனர். அதனால் நன்கொடையாளர் நிதியை பெற்று மராமத்து செய்வதா அல்லது துறையின் நிதியை பெற்று மராமத்து செய்வதா என்று ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !