உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிக்கிருத்திகை; பக்தர்கள் காவடி நேர்த்தி்க்கடன்

அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிக்கிருத்திகை; பக்தர்கள் காவடி நேர்த்தி்க்கடன்

திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு கோவில் பழனி ஆண்டவர் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. வெள்ளிக் கவசத்தில் பழனி ஆண்டவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து தரிசனம் செய்தனர். முன்னதாக பக்தர்கள் 2001 காவடி எடுத்து மாட வீதி உலா வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !