உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆடி கிருத்திகை விழா

திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆடி கிருத்திகை விழா

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு இன்று காலை 6:00 மணிக்கு மூலமூர்த்தி களுக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து முருகர் சன்னதியில் விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசகம், கலச ஸ்தாபனம், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் ஆவாகனம், பஞ்சாசன பூஜை, ஆவரண பூஜை, காவடி புறப்பாடாகி வீதியுலா நடந்தது. இதில் வேண்டுதல் உள்ள பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் கோவிலை வந்தடைந்தனர். மூலவர் சுப்பிரமணியருக்கு மகாபார அபிஷேகம், வெள்ளி கவசத்தில் அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இதில் முருக பக்தர்கள் அரோகரா தோஷத்துடன் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !