உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காங்கயம்பாளையம் முருகன் கோவிலில் திருவிளக்கு பூஜை

காங்கயம்பாளையம் முருகன் கோவிலில் திருவிளக்கு பூஜை

சூலூர்: காங்கயம் பாளையம் சென்னியாண்டவர் கோவிலில், திருவிளக்கு பூஜை நடந்தது. காங்கயம் பாளையம் ஸ்ரீ சென்னியாண்டவர் கோவிலில், ஆடிக்கிருத்திகையை ஒட்டி நேற்று திருவிளக்கு பூஜை நடந்தது. முன்னதாக, ஸ்ரீ சென்னியாண்டவருக்கு, பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், தேன் மற்றும் நறுமண திரவிய பொடிகளால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அலங்கார பூஜை நடந்தது. பின்னர், திருவிளக்கு பூஜை துவங்கியது. அலங்கரிக்கப்பட்ட திருவிளக்குகளுக்கு, பெண்கள் பூக்கள் தூவி அர்ச்சனை செய்தனர். கற்பூர ஆரத்தி காட்டி வேண்டினர். சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !