ஆடி கிருத்திகை பூஜை; சூலூர் முருகன் கோவில்களில் பரவசம்
ADDED :874 days ago
சூலூர்: சூலூர் வட்டார முருகன் கோவில்களில் நடந்த ஆடிக் கிருத்திகை பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். சூலூர் வட்டார முருகன் கோவில்களில் ஆடிக் கிருத்திகை பூஜை நேற்று நடந்தது. சூலூர் சிவன் கோவில், குமரன் கோட்டம், பொன்னாண்டாம்பாளையம் சென்னியாண்டவர் கோவில், சின்னியம்பாளையம் வேல்முருகன் கோவில், காங்கயம் பாளையம் சென்னியாண்டவர் கோவில், கண்ணம்பாளையம் பழனி ஆண்டவர் கோவில், சூலூர் பழனி ஆண்டவர் கோவில் மற்றும் செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவிலில், முருகபெருமானுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் முருக பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தி பரவசத்துடன் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.