/
கோயில்கள் செய்திகள் / பாதாள பிரித்திங்கரா காளிக்கு மஞ்சள் நீர் ஏந்தி வந்த பக்தர்கள்; அபிஷேகம் செய்து வழிபாடு
பாதாள பிரித்திங்கரா காளிக்கு மஞ்சள் நீர் ஏந்தி வந்த பக்தர்கள்; அபிஷேகம் செய்து வழிபாடு
ADDED :757 days ago
புதுச்சேரி ; புதுச்சேரி, மொத்தாண்டி கிராமத்தில் உள்ள பாதாள பிரித்திங்கரா காளி கோயிலில் பக்தர்கள் மஞ்சள் நீர் குடம் ஏந்தி ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.புதுச்சேரி அடுத்த விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் மொத்தாண்டி கிராமத்தில் உள்ளது பாதாள ஸ்ரீ பிரித்திங்கரா காளி கோயில். இங்கு, இன்று ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மஞ்சள் நீர் குடம் ஏந்தி ஊர்வலமாக வந்தனர். அம்மனுக்கு அபிஷேகம் செய்து மனமுருகி வழிபட்டனர். தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை காத்திருந்து தரிசனம் செய்தனர்.