உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்னூரில் வேப்பிலை, மாவிலையுடன் மஞ்சள் நீர் எடுத்து வந்து பக்தர்கள் வழிபாடு

குன்னூரில் வேப்பிலை, மாவிலையுடன் மஞ்சள் நீர் எடுத்து வந்து பக்தர்கள் வழிபாடு

குன்னூர்: ஆடி வெள்ளியை முன்னிட்டு குன்னூர் துர்க்கை அம்மன் கோவிலில் இருந்து தந்தி மாரியம்மன் கோவிலுக்கு மஞ்சள் நீர் அபிஷேக ஊர்வலம் நடந்தது.நீலகிரி மாவட்ட இந்து அன்னையர் முன்னணி சார்பில், குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில், 2ம் ஆண்டு மஞ்சள் நீர் அபிஷேக விழா இன்று நடந்தது. விழாவையொட்டி குன்னூர் துர்க்கை அம்மன் கோவிலில் இருந்து தந்தி மாரியம்மன் கோவிலுக்கு மஞ்சள் நீர் அபிஷேக குடங்கள் ஊர்வலம் நடந்தது. இந்து முன்னணி மாநில பொது செயலாளர் கிஷோர் குமார் தலைமை வைத்து துவக்கி வைத்தார். விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள், வேப்பிலை, மாவிலையுடன் கூடிய மஞ்சள் நீர் குடங்களை தாரை தப்பட்டைகள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து நந்தி மாரியம்மன் கோவில் அம்மனுக்கு சிறப்பு , அலங்காரம், ஆராதனை நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை இந்து அன்னையர் முன்னணியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !