யோகிராம் சுரத்குமார் ஆசிரமத்தில் கவர்னர் ரவி வழிபாடு
ADDED :757 days ago
திருக்கோவிலூர்: கவர்னர் ரவி தன் மனைவி லட்சுமியுடன் திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தை பார்வையிட்டு, பூஜைகள் செய்தார்.கவர்னர் ரவி, இரண்டு நாள் பயணமாக திருவண்ணாமலை சென்றிருந்தார். இதன் ஒரு பகுதியாக நேற்று மாலை பகவான் யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்திற்கு சென்றார். ஆசிரம அறங்காவல் குழு நிர்வாகிகள் ராமநாதன், சுவாமிநாதன் வரவேற்றனர். தேவகிஅம்மா, சுவாமிஜியின் வரலாறு, ஆசிரமத்தின் செயல்பாடுகள் குறித்து கவர்னருக்கு விளக்கி கூறினார். தொடர்ந்து ஆசிரம வளாகத்தில் நடந்த பூஜையில் பங்கேற்று ஆளுநர் ரவி பூஜை செய்தார். அவருடன் அவரது மனைவி லட்சுமி உடன் இருந்தார். அறங்காவல் குழுவைச் சேர்ந்த விஜயலட்சுமி அம்மா, ராஜேஸ்வரி அம்மா, குமரன் ஆகியோர் இருந்தனர். ஆசிரம நிர்வாகத்தின் சார்பில் ஆளுநர் ரவிக்கு சால்வை அணிவித்து நன்றி கூறினர்.