உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி வெள்ளி ; போடி அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை

ஆடி வெள்ளி ; போடி அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை

போடி: ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் மலர் அலங்காரத்தில் பத்மாவதி தாயாருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம். தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பத்மாவதி தாயாரின் தரிசனம் பெற்றனர்.

போடி குலாலர்பாளையம் கல்கத்தா காளியம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கூழ் காய்ச்சி பிரசாதமாக வழங்கப்பட்டன. போடி தாய் ஸ்தலம் ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயில், போடி திருமலாபுரம் முத்துமாரியம்மன் கோயில், போடி அருகே விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயில், தேவாரம் பராசக்தி மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !