உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முனியாண்டி கோயிலில் ஆடி உற்ஸவ திருவிழா

முனியாண்டி கோயிலில் ஆடி உற்ஸவ திருவிழா

வடமதுரை: வடமதுரை மேற்குரத வீதியில் இருக்கும் முனியாண்டி கோயில் ஆடி உற்ஸவ திருவிழா இரு நாட்கள் நடந்தது. தேரோடு வீதிகள் வழியே பால் குடங்களுடன் ஊர்வலமான வந்த பக்தர்கள் சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்தனர். அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சுவாமி ரத ஊர்வலமும் நடந்தது. பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்ட பின்னர், ஏராளமான ஆட்டு கிடாய்களை வெட்டி பொது விருந்து வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டினை விழா குழுவினரும், பவுர்ணமி பூஜை உறுப்பினர்களும் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !