கமுதி அருகே இலந்தை செடி முள் மேல் படுத்து அருள்வாக்கு கூறிய பக்தர்
கமுதி: கமுதி அருகே பாம்புல்நாயக்கன்பட்டி கிராமத்தில் கரியமல்லம்மாள் கோயில் ஆடிப்பொங்கல் முளைப்பாரி விழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் , பூஜைகள் நடந்தது. பொங்கல், சக்தி கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் அக்கினிசட்டி,ஆயிரம் கண் பானை மற்றும் உடல்முழுவதும் சகதி பூசி சேத்தாண்டி வேடம், வினோதமான முறையில் பக்தர்கள் சாக்கு வேடம் அணிந்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து கோயிலில் நேர்த்திகடன் செலுத்தினார். கரியமல்லம்மாள் அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது.திருவிழா முன்னிட்டு அதேகிராமத்தைச் சேர்ந்த பலஆண்டுகளாக அருள்வாக்கு கூறி வரும் முதியவர் சுந்தர்ராஜ் விவசாய நிலங்களில் அருகே இலந்தை செடி முள் மீது படுத்து மக்களுக்கு அருள்வாக்கு கூறினார். கிராமமக்கள் முளைப்பாரியை ஊர்வலமாக தூக்கி சென்று ஊரணியில் கரைத்தனர். விழாவில் கமுதி அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.