உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனம்: முன்யோசனை அவசியங்க!

மீனம்: முன்யோசனை அவசியங்க!

லட்சிய சிந்தனையும் இரக்க குணமும் உள்ள மீனராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு சுக, சப்தம ஸ்தான அதிபதி புதனும், கேதுவும் தன் பங்கிற்கு வளமான பலன்களைத் தருவர். அஷ்டமச்சனியின் தாக்கம் இருப்பதால் எந்த செயலிலும் நிதானம் பின்பற்ற வேண்டும். விரும்பிய வகையில் வீடு, வாகன மாற்றம் செய்வீர்கள். புத்திரர் தகுதி, திறமை வளர்க்க கூடுதல் பயிற்சி பெற ஏற்பாடுசெய்வீர்கள். பூர்வ சொத்து உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.உடல்நலக்குறைவு வராத அளவில் முன்யோசனையுடன் நடந்துகொள்ள வேண்டும். எதிரியால் இருந்த தொந்தரவு குறையும். குடும்பச் செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படும். தம்பதியர் ஒருவர் செயலில் மற்றவர் குறை காணாமல் செயல்படுவதால் மட்டுமே குடும்ப ஒற்றுமை சீராகும். நண்பர்களின் ஆலோசனையின் தன்மை உணர்ந்து செயல்படுவது அவசியம். தொழிலதிபர்கள் கூடுதல் முதலீட்டு தேவைக்கு உள்ளாவர். சராசரி உற்பத்தி, மிதமான பணவரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு விற்பனை சரிவால் லாபம் குறையும். பணியாளர்களுக்கு சொந்தப்பணிகள் குறுக்கிடுவதால் வேலைக்குச் செல்வதில் சிரமம் இருக்கும்.  குடும்பச் செலவுக்கு குறைந்த அளவு கடன் பெறுவீர்கள். குடும்ப பெண்கள் கணவரின் அனுமதி இன்றி குடும்பச் செலவுக்காக எவரிடமும் கடன் பெறக்கூடாது. பணிபுரியும் பெண்கள் மனக்குழப்பத்தினால் பணி இலக்கு பூர்த்தி செய்வதில் சுணக்கம் ஏற்படலாம். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான உற்பத்தி, விற்பனை, மிதமான அளவில் பணவரவு காண்பர். இரவல் நகை கொடுக்க, வாங்கக் கூடாது. அரசியல்வாதிகள் கடந்த காலத்தில் பெற்ற நற்பெயருக்கு களங்கம் வராத அளவில் செயல்படுவது அவசியம். விவசாயிகளுக்கு எதிர்பார்ப்பைவிட மகசூல் குறையலாம். கால்நடை பராரிப்பிலும் கணிசமான தொகை செலவாகும். மாணவர்கள் லட்சிய மனதுடன் படித்து நல்ல தேர்ச்சியும் பெற்றோர் மனதில் தன்னைப்பற்றிய நம்பிக்கையும் உருவாக்குவர்.

பரிகாரம்: யோக நரசிம்மரை வழிபடுவதால் புண்ணிய பலன் வந்துசேரும்.
உஷார் நாள்: 17.10.12 காலை 6 முதல் 17.10.12 இரவு 11.10 வரை மற்றும் 12.11.12 காலை 5.33 மணி முதல் 14.11.12 காலை 8.20 வரை
வெற்றி நாள்: அக்டேபர் 31, நவம்பர் 1, 2
நிறம்: சிமென்ட், ரோஸ்,எண்: 1, 4.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !