ஷீரடி சாய்பாபா கோவிலில் ஆவணி மாதத்தை வரவேற்று சிறப்பு பூஜை
ADDED :840 days ago
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோவிலில் இன்று ஆடி (32ம் தேதி) மாதம் நிறைவு, நாளை ஆவணி மாதம் 1ம் தேதியை வரவேற்கும் விதமாக சாய்பாபாவிற்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. வியாழக்கிழமை என்பதால் தேனி மாவட்டத்தில் பல்வேறு ஊர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் சாய் ஆரத்தி பூஜையில் பங்கேற்றனர். சிறப்பு அலங்காரத்தில் சாய்பாபா பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.