ஆதி மகாதேவி நாகேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா
ADDED :784 days ago
கோபால்பட்டி, கோபால்பட்டி அருகே திம்மணநல்லூர் ஊராட்சி தி.பள்ளபட்டி ஆதி மகாதேவி நாகேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நிகழ்ச்சிகளும் நடந்தது. பக்தர்கள் பால்குடங்களுடன் வீதிஉலா வந்தனர். பின்னர் பெண்கள் கோவில் முன்பாக பொங்கல் வைத்து வழிபட்டனர். அதைத் தொடர்ந்து கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் திம்மணநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். இதில் திம்மணநல்லூர் ஊராட்சி தலைவர் கவிதா தர்மராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.