உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மன் கோவில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை

அம்மன் கோவில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை

சூலூர்: வெள்ளிக்கிழமையை ஒட்டி, அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆடி மாத நான்கு வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. சில கோவில்களில், ஆவணி மாத முதல் வெள்ளிகிழமையை, ஐந்தாவது வெள்ளிக்கிழமையாக கொண்டு சிறப்பு பூஜைகள் நடத்துவது வழக்கம். பொன்னாண்டாம்பாளையம் அங்காளம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமையை ஒட்டி, சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல், சூலூர் குடலுருவி மாரியம்மன் கோவிலில் அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !