/
கோயில்கள் செய்திகள் / காரைக்குடி அருகே தர்ம முனீஸ்வரர் கோயிலில் பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
காரைக்குடி அருகே தர்ம முனீஸ்வரர் கோயிலில் பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED :839 days ago
காரைக்குடி: காரைக்குடி அருகே தர்ம முனிஸ்வரர் கோயில் பால்குட திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இழுப்பக்குடி முத்துநகர் தர்ம முனிஸ்வரர் கோயில் 10 ஆம் ஆண்டு பால்குட திருவிழா கடந்த 10ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான கோயில் கரகம் மற்றும் பால்குட திருவிழா நேற்று நடந்தது. காரைக்குடி முத்தாலம்மன் கோயிலில் இருந்து கோயில் கரகம் முன்னே வர பால்குடம் எடுத்து பக்தர்கள் முக்கிய வீதி வழியாக இலுப்பக்குடி தர்ம முனிஸ்வரர் கோயிலை வந்தடைந்தனர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.