மணக்குள விநாயகர் கோயிலில் பிரம்மோற்சவ விழா; சுவாமி உலா
ADDED :793 days ago
புதுச்சேரி; புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நேற்று காலை தொடங்கியது. இரவில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.