உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓணம் பண்டிகை: குருவாயூர் கோவிலில் பக்தர்களை கவர்ந்த மச்ச அவதார பூக்கோலம்

ஓணம் பண்டிகை: குருவாயூர் கோவிலில் பக்தர்களை கவர்ந்த மச்ச அவதார பூக்கோலம்

பாலக்காடு: ஓணம் பண்டிகையை ஒட்டி குருவாயூர் கோவிலில் போடப்பட்ட மச்ச அவதார பூக்கோலம் பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.

கேரளாவின் பிரசித்தி பெற்ற கோவில் குருவாயூர் கிருஷ்ணர் கோவில். இங்கு ஓணம் பண்டிகையை ஒட்டி அத்தம் நாளான 20ம் தேதி முதல் 10 நாட்கள் பிரம்மாண்ட பூக்கோலம் போட்டு வருகின்றன. இந்த நிலையில் விசாகம் நாளான இன்று மூலவரின் பத்து அவதாரங்களில் முதல் அவதாரமான மச்ச அவதாரத்தை குறிக்கும் வகையில் போடப்பட்ட 20 அடி நீளம் 10 அடி அகலமும் உள்ள 50 கிலோ எடை கொண்ட பூக்களால் போடப்பட்ட பூக்கோலம் பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது. ஓவியர் ரமேஷ் பாலாமணியின் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு இந்த பூக்கோலத்தை போட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !