உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுமங்கலி பாக்கியம் நிலைக்க விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை

சுமங்கலி பாக்கியம் நிலைக்க விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை

சிவகங்கை; சிவகங்கை விஷ்ணு துர்க்கை அம்மன் கோயிலில்  வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சிவகங்கை விஷ்ணு துர்க்கை அம்மன் கோயிலில்  வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு சுமங்கலி பாக்கியம் நிலைக்க வேண்டி பெண்கள் வழங்கிய தாம்பூலம் அம்பாளிடம் வைத்து பூஜை செய்யப்பட்டது. வரலட்சுமி நோன்பை முன்னிட்டு கோவிலில் குபேர மகாலட்சுமி அம்மன், வெங்கடாஜலபதி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !