அய்யாபட்டி அய்யனார் கோவிலில் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி
ADDED :828 days ago
கோபால்பட்டி, கோபால்பட்டி அருகே அய்யாபட்டி அய்யனார் கோவிலில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பூணூல் மாற்றும் நிகழ்வு நடந்தது. இதில் சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, காமோ கார்ஷித் மந்திர ஜெப சங்கல்பம், யக்ஞோபவீத காரண மந்திரம், காண்டரிஷி தர்ப்பணம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து விரதம் இருந்து வந்த சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பூணூல் மாற்றப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.